Monday, October 7, 2013

பாண்டிச்சேரி வரலாறு


பாண்டிச்சேரி (Pondicherry, /pɒndɪˈtʃɛri/ அல்லது /pɒndɪˈʃɛri/) அல்லது புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் புதுச்சேரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சிப் பகுதியும் ஒன்றியப் பகுதியின் தலைநகரமும் ஆகும். முன்னதாக பாண்டி என சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்த நகரம் 2006ஆம் ஆண்டிலிருந்து புதுச்சேரி என அழைக்கப்படுகிறது. நகரமைப்பு புதுச்சேரி நகரத்தில் பிரெஞ்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது புதுவையின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். புதுச்சேரியின் கிழக்குப் பகுதியில் கடற்கரை உள்ளது. புதுச்சேரி வரலாறு முதலாம் நூற்றாண்டின் மத்தியில் உரோமானிய வணிகவிடங்களில் பொடுகெ அல்லது பொடுகா எனப்படும் இடம் குறிப்பிடப்படுகிறது. இது நான்காம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்து பல்லவப் பேரரசின் அங்கமாக இருந்தது. பத்தாம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் சோழர்களின் வசம் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் கைப்பற்றினர். 14ஆம் நூற்றாண்டிலிருந்து 1638இல் பீஜப்பூர் சுல்தான் கைப்பற்றும்வரை வசயநகரப் பேரரசின் அங்கமாக இருந்தது. 1674இலிருந்து பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சியில், இடையிடையே ஆங்கிலேயர்களிடமும் டச்சுக்காரர்களிடமும் குறுகிய காலத்திற்கு இருந்தபோதும், இருந்து வந்தது. 1962ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி, புதுவைக்கு வருவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று. அந்த வழியில், மகாகவி பாரதியார், பெருஞ்சித்திரனார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி, புதுவையின் கவிஞர் பெருமக்கள், பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி, உலக அரங்கில் முன்னிறுத்த பெரும் பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல. புதுச்சேரியின் வரலாற்றில் ஒரு பெரும்பகுதி பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்ததன் விளைவாக இங்கு பிரெஞ்சு மொழி இலக்கியமும் வளர்ச்சி பெற்றது. பல பிரெஞ்சு இலக்கியக் கழகங்கள் இன்றும் இங்கு இயங்கி வருகின்றன. காட்சிக்கூடம் அரவிந்தரின் ஆசிரமம் மணக்குள விநாயகர் திருக்கோவில் மணக்குள விநாயகர் கோவில் யானை தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, புதுச்சேரி அமல உற்பவ அன்னை பேராலயம், (ஜென்ம இராக்கினி மாதா கதிடிரல்) புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலை புதுச்சேரி சட்டப்பேரவை புதுச்சேரி கடற்கரையின் ஒரு பகுதி புதுச்சேரி கடற்கரையின் மற்றோரு பகுதி புதுவை பாரதி பூங்கா குபேர் மார்க்கெட் மணிக்கூண்டு புதுச்சேரி கடற்கரை புதுச்சேரி காந்தி சிலை புதுவைப் பல்கலைக்கழகம் புதுவைப் பல்கலைக்கழகம் இந்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் (central university) ஒன்றாகும். 1985ல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் கிளை வளாகங்கள் புதுவை, காரைக்கால், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகளில் உள்ளது. இது 13 இயற்புலன்களை (schools) உடையது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பேரா.சந்திரா கிருஷ்ணமூர்தி துணைவேந்தராகவும் இருக்கிறார்கள். புதுவைப் பல்கலைக்கழகப் பண் புதுவைப் பல்கலைக்கழகப் பண், இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேரா. ஜலீஸ் அக்மெத் காண் தரீனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, திரு.பழனி பாரதி, பேரா. பாலசுப்பிரமணியன் மற்றும் பேரா. குணசேகரன் என்பவர்களால் தமிழ் வடிவம் கொடுக்கப்பட்டது. இதன் இசையமைப்பாளர் திரு. ஆர். பரத்வாஜ் ஆவார். மின்னணு தொடர்புத்துறை இயற்புலத்தால் (Center for Electronic Media) காணொளி வடிவில் வெளியிடப்பட்டது. தமசோமா ஜோதிர்கமய[2] தமசோமா ஜோதிர்கமய ஒளிபரவ, ஒளிபரவ புதுவை புதுவை புதுவையே போற்றுவோம் புதுவை பல்கலைக் கழகமே உனை வாழ்த்துவோம் வங்கக் கடலலை தாலாட்டும் ஞானச் சூரியன் உதிக்குமிடம் இது எங்கள் புதுநெறி காட்டும் உலகம் எந்நாளும் அறிவுத் தேடல் தொடரும் அறிவூற்றைப் பொழியும் ஆசிரியர் - அதில் தினமும் நனையும் மாணவர்கள் இதிலன்றோ புதுவைப் பல்கலைக் கழகம் அறிவின் தாகம் தணியும் சோலை அகிலம் போற்றும் கல்விச் சாலை மனித வளமே என்றும் உயர புனித சேவை தொடருதே பாரதித் தமிழால் நனைத்த இடம் - எங்கள் பாரதிதாசன் விளைந்த நிலம் அரவிந்தர் ஆசிகள் பெற்றதுடன் அகில உலகிற்கு ஒளிர்விடும் இனிய தளம் அறிவிச் சுடரொளி நெஞ்சில் எழ யாதும் ஊரே யாவரும் கேளிர் மாண்பினை உரைக்கும் மக்கள் அரங்கம் ஆ அ ஆ அ ஆ........(2) இதிலன்றோ புதுவைப் பல்கலைக் கழகம் அறிவின் தாகம் தணியும் சோலை அகிலம் போற்றும் கல்விச் சாலை மனித வளமே என்றும் உயர புனித சேவை தொடருதே பல்கலைக் கழகம் என்றும் வளர்ந்திட நாமும் வழிபடுவோம் - கல்விச் சேவைகள் யாவும் காலமும் தொடர்ந்திட நாளும் வேண்டுவோம் புதுவையே புதுமையே போற்றிடும் பல்கலைக் கழகமே என்றும் வாழ்கவே ! வாழ்கவே ! வாழ்கவே ! வாழ்கவே ! புதுவை புதுவை புதுவையே போற்றுவோம் புதுவை பல்கலைக் கழகமே உனை வாழ்த்துவோம்

3 comments:

  1. Indian Premier League
    live cricket score IPL
    IPL schedule, world cup cricket
    fastest live cricket score the app
    Fantasy Leagues
    IPL
    Cricketmazza11
    live cricket android app download
    best cricket scoring app
    best live cricket app download
    Bet365 App, Bet365 India
    Bet365 website
    bet365 Games

    ReplyDelete